அரசுப் பேருந்து கட்டணம் உயர்வு; தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 19 ஜனவரி 2018 (19:50 IST)
தமிழக அரசு அரசுப் பேருந்துகளுக்கான பயணச்சீட்டு கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

 
மாநகர பேருந்துகளில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.3-ல் இருந்து ரூ.5ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாநகர பேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் ரூ.12-ல் இருந்து ரூ.19ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விரைவு பேருந்துகளுக்கான கட்டணம் 30 கி.மீ வரை ரூ.17-ல் இருந்து ரூ.24ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 
 
குளிர்சாதன பேருந்துகளில் ரூ.27-ல் இருந்து ரூ.42ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வால்வோ பேருந்துகளில் ரூ.33-ல் இருந்து ரூ.51ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதீநவீன பேருந்துகளில் ரூ.21-ல் இருந்து ரூ.33ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
 
இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசு பேருந்துகளுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்