அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு - ஓட்டுநர், பயணிகளுக்கு காயம்!

சனி, 30 அக்டோபர் 2021 (14:59 IST)
மதுரை தேவர் சிலை முன்பு அரசு பேருந்து கண்ணாடி உடைத்து இளைஞர்கள் அட்டகாசம் செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. 
 
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செய்ய வந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அட்டகாசம் செய்து ரகளையில் ஈடுபட்டனர். அப்போது கோரிப்பாளையத்தில் இருந்து மாட்டுத்தாவணிக்கு சென்று கொண்டிருந்த பேருந்தின் கண்ணாடி உடைத்து பயணிகளை அச்சுறுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்