தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ’ரெட் அலர்ட்’!

சனி, 30 அக்டோபர் 2021 (12:34 IST)
தமிழகத்தின் 4 மாவட்டங்களிலும் மிக அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  

 
தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் நவம்பர் 1 ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, நாமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்