ஷாரூக்கான், சுரேஷ் குமார் அதிரடி; மதுரைக்கு அணிக்கு இமாலய இலக்கு கொடுத்த கோவை கிங்ஸ்..!

ஞாயிறு, 2 ஜூலை 2023 (17:49 IST)
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று மதுரை மற்றும் கோவை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது.
 
இதில் முதலில் பேட்டிங் செய்த லைக்கா கோவை கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்துள்ளது. சுரேஷ்குமார் 64 ரன்கள், சச்சின் 67 ரன்களும், ஷாருக்கான் அதிரடியாக 23 பந்துகளில்  53 ரன்கள் அடித்துள்ளனர் 
 
இந்த நிலையில் 209 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் மதுரை அணி தற்போது ஏழு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 73 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்