டிஎன்பிஎல் கிரிக்கெட்.. மதுரை அணிக்கு மேலும் ஒரு வெற்றி.. திருப்பூரை வீழ்த்தியது..!

புதன், 5 ஜூலை 2023 (07:26 IST)
கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய போட்டியில் திருப்பூர் மற்றும் மதுரை அணிகள் மோதின. 
 
இதில் முதலில் மதுரை அணி பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 161 ரன்கள் என்ற இலக்கை நோக்கி திருப்பூர் அணி விளையாடி நிலையில் அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது/ இதனால் மதுரை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடைசி ஓவரில் திருப்பூர் அணி 17 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது ஆனால் முதல் மூன்று பந்துகளில் அந்த அணி 11 ரன்கள் எடுத்ததால் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில் அடுத்த மூன்று பந்துகளில் ஒரு விக்கெட்டை இழந்து ஒரு ரன் மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்