கடத்திய தங்கத்தை விமானத்திலேயே விட்டு போன மர்ம ஆசாமி!

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (11:13 IST)
துபாயிலிருந்து வந்த எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானத்தை சுத்தப்படுத்தும்போது அதன் சீட்டிற்கு அடியில் மறைத்து வைத்திருந்த ரூ.59 லட்சம் மதிப்புடைய 1.15 கிலோ தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை.
 
துபாயிலிருந்து சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம் இன்று காலை வந்தது. அந்த விமானம் மீண்டும் துபாயக்கு புறப்பட்டு செல்ல வேண்டும். அதற்கு முன்னதாக சென்னை விமானநிலைய ஊழியா்கள் விமானத்திற்குள் ஏறி சுத்தம் செய்தனா்.
 
அப்போது விமானத்தின் ஒரு சீட்டிற்கு அடியில் ஒரு கறுப்பு கலா் பை மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து பையை எடுத்து பிரித்து பாா்த்து சோதணையிட்டனா். அதனுள் தங்கக் கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடிதகதனா்.
 
உடனடியாக சென்னை விமானநிலைய சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனா். அதனுள் மொத்தம் ஒரு கிலோ 150 கிராம் தங்கக்கட்டிகள் இருந்தன. அதன் சா்வதேச மதிப்பு ரூ.59 லட்சம். இதையடுத்து சுங்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா். 
 
அதோடு துபாயிலிருந்து தங்கத்தை கடத்தி வந்து விமான சீட்டிற்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு தப்பியோடிய கடத்தல் ஆசாமியை தேடுகின்றனா். விமானத்தில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமரா மற்றும் விமானநிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்து வருகின்றனா்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்