உத்தரப்பிரதேச மாநிலத்தில் பச்சிளம் குழந்தைக்கு தவறான ஊசி போட்டதால், அந்த குழந்தையின் கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதை தொடர்ந்து, மருத்துவரின் அலட்சியத்திற்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பச்சிளம் குழந்தை ஒன்று அனுமதிக்கப்பட்டிருந்தது. அந்த குழந்தைக்கு மருத்துவர் தவறான ஊசி போட்டதால், அந்த குழந்தைக்கு அலர்ஜி ஏற்பட்டு, கையை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஊசியை செலுத்திய பிறகு நான்கு நாள் கழித்துத்தான் குழந்தையின் நிலை தெரிய வந்ததாகப் பெற்றோர்கள் கூறியுள்ளனர். இது குறித்து விசாரணை செய்ய மூன்று பேர் கொண்ட மருத்துவ குழுவை மாநில அரசு அமைத்துள்ள நிலையில், அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.