உளுந்து, துவரம் பருப்பு குறைந்த விலைக்கு விற்பனை! – உணவுத்துறை நடவடிக்கை!

வெள்ளி, 14 ஜூலை 2023 (08:14 IST)
தமிழ்நாட்டில் உணவு பொருட்கள் விலை அதிகரித்து வரும் நிலையில் கொள்முதல் விலைக்கே விற்பனை செய்ய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.



தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்வை தொடர்ந்து துவரம் பருப்பு, உளுந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்வை சந்தித்துள்ளது. இதனால் பொதுமக்கள் உணவு பொருட்களை வாங்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தக்காளி விலை உயர்வை அடுத்து ரேசன் கடைகள், அரசு பசுமைப் பண்ணைகள் மூலமாக குறைந்த விலைக்கு தக்காளி மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல தற்போது விலை உயர்ந்துள்ள உளுந்து மற்றும் துவரம் பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் அமுதம் அங்காடிகள் மூலமாக கொள்முதல் விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றன.

அதன்படி உளுந்து 500 கிராம் ரூ.60க்கும், துவரம் பருப்பு 500 கிராம் ரூ.75க்கும், தக்காளில் கிலோ ரூ.60க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை பழைய நிலைக்கு திரும்பும் வரை இந்த விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்