கூரியர் வேனில் 11 கிலோ தங்கம், வெள்ளி நகைகள்: பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல்..!

Siva

செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (13:14 IST)
விருதுநகர் மாவட்டத்தில் கூரியர் வேன் ஒன்றில் 11 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில் தகுந்த ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்படும் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 
 
அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் சத்திரரெட்டிபட்டி என்ற பகுதியில் பறக்கும் படையினர் சோதனை செய்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கூரியர் வேனை தடுத்து நிறுத்து சோதனை செய்தனர் 
 
அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 11. 5 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி இருந்ததை அடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நகைகள் மதுரையிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள நகைகடைக்கு கொண்டு செல்வதாக கூறப்பட்டாலும் அந்த நகைகளுக்கு தகுந்த ஆவணங்கள் இல்லை என்பதால் அவை பறிமுதல் செய்யப்பட்டு விருதுநகர் தாலுகா தேர்தல் அலுவலர் கார்த்திகேயனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நகைகளின் மதிப்பு 4 கோடிக்கு மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்