மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறை சோதனை.. ரூ.2 கோடி ரொக்கம், 2.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல்..!

வெள்ளி, 29 டிசம்பர் 2023 (11:07 IST)
மேற்குவங்க மாநிலத்தில் திடீரென ஒன்பது இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்ததில்  2 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 2.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு தொடர்பாக மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 9 இடங்களில் நேற்று திடீர் என சோதனை செய்தனர். இதில் ராபின் யாதவ் என்பவரது வீட்டில் மட்டும் 2 கோடி ரூபாய் மற்றும் 2.5  கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதுமட்டுமின்றி 13,000 பக்கங்கள் கொண்ட சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  
 
இதே வழக்கில் தான் கடந்த ஆண்டு மேற்குவங்க மாநில கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டார் என்பதும் அவருக்கு நெருக்கமான ஒரு நடிகையின் வீட்டில் இருந்து 50 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்