இளங்கோவன் வீட்டில் 21 கிலோ தங்கம், 280 ஒரு கிலோ வெள்ளி பறிமுதல்?

வெள்ளி, 22 அக்டோபர் 2021 (22:12 IST)
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நெருக்கமானவரும் தமிழக கூட்டுறவு சங்க தலைவருமான இளங்கோவன் என்பவரது வீட்டில் இன்று காலை அதிரடியாக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்றைய சோதனையில் அவருக்கு சொந்தமான நான்கு இடங்களில் நடைபெற்ற சோதனையில் 21.2 கிலோ தங்கம், 282 கிலோ வெள்ளி மற்றும் சுமார் 29.77 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
21 கிலோ தங்கம் என்பது கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் மதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இளங்கோவன் மீது மேலும் விசாரணை செய்ய லஞ்ச ஒழிப்பு துறையினர் திட்டமிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்