பிறப்பால் தமிழர் என்பதால் கர்நாடகாவில் ஒதுக்கப்படுகிறேன்… விருது வென்ற இயக்குனர் ஆதங்கம்!

வெள்ளி, 22 அக்டோபர் 2021 (10:35 IST)
கர்நாடகாவில் பிறந்த தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட இயக்குனர் கு கணேசன் இயக்கியுள்ள நம்ம மகு என்ற திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளது.

இதுவரை 16 படங்களை இயக்கியுள்ள கு கணேசன் பிறந்தது கர்நாடக மாநிலம் பெங்களூருதான் என்றாலும் அவரின் பெற்றோர் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்கள். இவர் இயக்கியுள்ள நம்ம மகு என்ற திரைப்படம் குழந்தைகள் கடத்தலைப் பற்றியது. இதுவரை பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டுள்ள இந்த திரைப்படம் விருதுகளையும் வென்று குவித்துள்ளது.

ஆனால் பிறப்பால் தமிழர் என்பதால் தான் கர்நாடகாவில் புறக்கணிக்கப்படுவதாக கு கணேசன் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். கர்நாடகாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இத்திரைப்படத்தை திரையிட கூட அனுமதிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்