இந்திய அளவில் டிரெண்ட் ஆகும் #GoBackStalin : என்ன காரணம்?

வியாழன், 22 ஜூன் 2023 (07:43 IST)
பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் கோபேக்மோடி என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகும் நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பீகார் செல்ல உள்ள நிலையில் #GoBackStalin என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நாடாளுமன்ற தேர்தலில் வியூகம் அமைப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று பீகார் மாநிலத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கும் நிலையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களும் கலந்து கொள்ள உள்ளார். 
 
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அவர் இன்று பீகார் செல்ல இருக்கும் நிலையில் நேற்று மாலை முதலே அவருக்கு எதிராக #GoBackStalin  என்ற ஹேஷ்டேக்  ட்விட்டரில் டிரெண்டாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹிந்தி மொழிக்கு எதிரானவர் என்றும் இந்து மதத்திற்கு எதிரானவர் என்றும் பீகார் மாநில மக்களை அவதூறாக பேசியவர் என்றும் அதனால் தான் #GoBackStalin  ஹேஷ்டேக்  இந்திய அளவில் இரண்டாகி வருவதாக ட்விட்டரில் பீகார் மாநில மக்கள் தெரிவித்து வருகின்றனர். 
 
இதற்கு தமிழக மக்கள் என்ன பதிலடி கொடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்