லியோ படத்தின் ஆக்‌ஷன் காட்சிக்காக ஸ்பெஷல் கேமரா… இந்தியாவிலேயே முதல் முறையாக…!

புதன், 21 ஜூன் 2023 (17:02 IST)
நண்பன் மற்றும் பீஸ்ட் ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு லியோ படத்தின் மூலம் விஜய்யுடன் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா. இந்த படத்துக்காக காஷ்மீரில் 60 நாட்கள் ஷூட் நடத்தி இப்போது சென்னையில் விறுவிறுப்பாக காட்சிகளை படமாக்கி வருகின்றனர் படக்குழுவினர்.

லியோ படம் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமாக உள்ள ஒரு படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கான KOMODO-X என்ற அதிநவீன கேமராவை வரவழைத்து சில காட்சிகளை படமாக்கியுள்ளாராம் மனோஜ் பரமஹம்சா.

இந்த அதிநவீன கேமரா இதுவரை ஹாலிவுட் படங்களில் மட்டுமே படங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தியாவிலேயே முதல்முறையாக இந்த கேமராவை லியோ படத்தில்தான் அறிமுகப்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக மனோஜ் பரமஹம்சா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ வைரல் ஆகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்