சிவகங்கை கம்பர் தெருவை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த மே மாதம் அவரது தந்தை மற்றும் சகோதரனால் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. சிறுமியின் தந்தை முத்துபாண்டி மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணிபுரிந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர்.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் அத்தை காவல் துறையில் அளித்த புகாரின் பேரில் பேரில் காவல் துறையினர் சிறுமியின் தந்தை மற்றும் சகோதரனை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் பல உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சிவகங்கை நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
மகளை பலாத்காரம் செய்த குற்றத்தில் ஈடுபட்டதில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறுமியின் தந்தை முத்துப்பாண்டி சில தினங்களுக்கு முன் பிணையில் வெளியே வந்திருந்தார். இந்தநிலையில் மனம் உடைந்த நிலையில் இருந்த முத்துப்பாண்டி வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.
முத்துப்பாண்டியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.