கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்த பெண் பாலியல் தரகரா? விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

Mahendran

வியாழன், 23 மே 2024 (13:40 IST)
ஆளுநர் மாளிகையில் குண்டு வீசிய கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்த பெண் பாலியல் தரகர் என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பள்ளி குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய விவகாரத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவலில் பள்ளி குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு தள்ளியது ஆளுநர் மாளிகையில் குண்டு வீசிய கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்த பெண் எனவும் அவர் தான் பாலியல் தரகராக செயல்பட்டார் என்றும் தெரிய வந்துள்ளது.
 
மேலும் பெண் பாலியல் தரகர் செல்போனில் ஏராளமான பள்ளி குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாலியல் தொழிலுக்கு ரவுடிகளின் உதவி தேவை என்பதால் கருக்காவை ஜாமினில் பெண் தரகர் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
 
என்.ஐ.ஏ அதிகாரிகள் கொடுத்த தகவலின் படி பாலியல் தரகர் மீது சென்னை போலீஸ் நடவடிக்கை எடுத்ததாக தெரிய வந்துள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்