கடம் உமா சங்கருடன் மீ டூ சம்பவம் நடந்தது எனவும் அதை ஆதாரத்தோடு அதற்கு உரிய ஆதாரமும் என்னிடம் உள்ளது என கூறிய ஸ்ரீரஞ்சனி, இது என் அலுவலகத்தில் சக ஊழியர்கள் கண் முன்பு பட்டப்பகலில் நடந்தது என்றும் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியும், பாடகியுமான ஸ்ரீ ரஞ்சனி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
7 ஆண்டுகளுக்கு பிறகு கழித்து நான் மீடியாவில் வேலை செய்தபோது யூடியூப் சார்ந்த புராஜெக்ட் தொடர்பாக அவர் அங்கு வந்தார். என்னை கடந்து சென்றபோது என் இடுப்பில் கிள்ளினார். இந்த சம்பவத்தை பார்த்து அங்கிருந்த ஆண்களும் என்னை போன்றே அதிர்ச்சி அடைந்தார்கள். அன்றில் இருந்து அவர் தொடர்பான எந்தவொரு புராஜெக்டுகளிலும் நான் வேலை செய்வதை தவிர்த்தேன்.