தமிழகத்தில் வரும் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விருப்பமனுவை பெற்று வந்தன. இந்த நிலையில் நேற்று உடன் விருப்பமனு கொடுக்கும் காலம் முடிவடைந்ததை அடுத்து, நாளை முதல் நேர்காணல் தொடங்க இருப்பதாக திமுக தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் இந்த நேர்காணல் குறித்து பாஜக பிரபலம் காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: நாளை நேர்காணலுக்கு செல்லும் அப்பாவி திமுக தொண்டர்களே? உங்களிடம் கட்சிக்கு என்ன உழைத்தீர்கள் எத்தனை முறை சிறை சென்றீர்கள்? சீனியாரிட்டி என்ன? என்று கேட்க போவதில்லை.
எத்தனை கோடி செலவு செய்வீர்கள்? என்ன ஜாதி? என்று மட்டுமே கேட்க போகிறார்கள். ஸ்டாலினுக்கும் உதவாதநிதிக்கும் கிச்சன் கேபினெட்டுக்கும் நெருக்கமான மிட்டா மிராசுகளுக்கும் அவர்களின் வாரிசுகளுக்கும் மட்டுமே வாய்ப்பு வழங்க போகிறார்கள், காலம் காலமாய் கட்சிக்கு உழைத்தவன் கடைசிவரை கொத்தடிமையாகவே இருக்க வேண்டும் என எண்ணம் கொண்ட திமுகவை புறக்கணித்து உழைப்பிற்கும், உண்மைக்கும், நேர்மைக்கும் மட்டுமே வாய்ப்பளிக்கும் பாஜக வில் இணையுங்கள். மோடிஜி தலைமையில் ஊழலற்ற தமிழகத்தை உருவாக்குவோம் வாரீர்! இவ்வாறு காயத்ரி ரகுராம் டுவீட் செய்துள்ளார்.