மோடி வருகை, வெளியாகாமல் இருக்கும் ஜெ. புகைப்படம் & மருத்துவ அறிக்கைகள்: அதிரடி திட்டத்தில் கார்டன்!

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2016 (12:57 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 3 வார காலத்துக்கும் மேலாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை குறித்து பிரதமர் மோடி ஏன் இன்னமும் மருத்துவமனை வந்து விசாரிக்கவில்லை என்ற கேள்விகள் எழுந்து வருகிறது.


 
 
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து வெளியான அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கைகளும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என நீண்ட நாட்களாக தமிழக மக்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள். பல்வேறு கட்சியினரும் இந்த கோரிக்கையை வைத்து வருகின்றனர்.
 
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க விரைவில் பிரதமர் மோடி வருவார் என்ற தகவல்களும் வருகின்றன. இதனையடுத்து இவ்வளவு நாளாக நீடித்து வந்த புகைப்படம் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் மோடியின் வருகையின் போது நிறைவேற்றி விடலாம் என கார்டன் தரப்பு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
 
இதுவரை யாரும் பார்க்காத சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவை பிரதமர் பார்ப்பது போல ஒரு புகைப்படத்தையும், ஒரு வார காலமாக வெளியாகமல் இருக்கும் மருத்துவமனையின் அறிக்கையையும் வெளியிட்டு முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார் என்பதை காட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்