மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் - வேலூரில் அதிர்ச்சி
புதன், 12 டிசம்பர் 2018 (15:00 IST)
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள பகுதியில் வசித்த சிறுமி (11) ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தார் சிறுமி. கடந்த சில மாதங்களாக தன் சக மாணவிகளுடன் ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வந்திருக்கிறார்.
நேற்று காலையும் வழக்கம் போல பள்ளிக்கு சென்ற சிறுமியை அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ஆட்டுநர் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் பள்ளிக்கு அருகில் வைத்து கடத்தி உள்ளனர்.
இதனையடுத்து மாணவியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இதுவரை 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
பள்ளி செல்லும் மாணவியை ஒரு கும்பல் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த விவகாரம் வேலூர் மக்களிடையே பீதியை தோற்றுவித்துள்ளது.