திருமணம் செய்த பெண்ணை கடத்திய தோழி : செங்கல்பட்டில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 3 மே 2016 (14:39 IST)
இரண்டாவது திருமணம் செய்தது பிடிக்காததல், மணப்பெண்ணை அவரது தோழியே கடத்திய சம்பவம் செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
திருத்தணியை சேர்ந்தவர் மகேஸ்வரி(28). அவரின் கணவர் இறந்து விட்டார். செங்கல்பட்டில் உள்ள ஒரு உறவினர் வீட்டிற்கு மகேஸ்வரி வந்த போது, அங்கு ஆண்ட்ரூஸ் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏறப்பட்டுள்ளது. அதுவே காதலக மாற இரண்டு மாதத்திற்கு முன்பு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.
 
இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி ஆண்ட்ரூஸ் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது மகேஸ்வரி வீட்டில் இல்லை. எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. அதனால், அதிர்ச்சியடைந்த ஆண்ட்ரூஸ், செங்கல்பட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 
 
இதற்கிடையில், மகேஸ்வரி செங்கல்பட்டு பச்சையம்மன் கோவில் அருகே உள்ள காட்டு பகுதியில் இருப்பது தெரிய வந்தது. போலீசார் அங்கு சென்று அவரை உடனே மீட்டனர்.
 
விசாரணையில், 5 பேர் கொண்ட கும்பல் மகேஸ்வரியை கடத்தியது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், மகேஸ்வரியின் தோழி கௌரி இதன் பின்னால் இருப்பது தெரியவந்துள்ளது.
 
கணவரை இழந்த மகேஸ்வரி, ஆண்ட்ரூசை 2வதாக திருமணம் செய்தது கௌரிக்கு பிடிக்கவில்லை என்பதால், தனது நண்பர்கள் மூலம் அவரை கடத்தியிருப்பது தெரிய வந்துள்ளது.
 
மகேஸ்வரியை கடத்திய ஐந்து பேரையும் போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமைறைவான கௌரியை வலைவீசி தேடிவருகின்றனர்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்