கோவளம் பகுதியை சார்ந்த கணவனை இழந்த பெண் ஒருவர் தனது 15 வயது மகளை வீட்டு வேலையில் சேர்த்து விடுமாறு, உறவினர் சகிதா பானு என்பவரோடு அனுப்பி வைத்துள்ளார். அவரை அழைத்துச் சென்ற பானு சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். இதில் பானுவின் காதலர் மதன்குமார், மதனின் தாய் செல்வி, மதனின் தங்கை சத்யா மற்றும் இன்னும் சில ப்ரோக்கர்களுக்கும் பங்குண்டு என தெரிய வந்துள்ளது.