கருணாநிதியை சந்தித்த காந்தி பேரன்

Webdunia
வியாழன், 13 ஜூலை 2017 (06:05 IST)
இந்திய குடியரசு தலைவர் தேர்தல் வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் குடியரசு துணை தலைவருக்கான தேர்தல் பரபரப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.



 
 
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் துணை குடியரசு தலைவர் வேட்பாளராக மகாத்மா காந்தியின் பேரனும் மேற்கு வங்கத்தின் முன்னாள் கவர்னருமான கோபாலகிருஷ்ண காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார்
 
தனக்கு ஆதரவு தரும்படி கோபாலகிருஷ்ண காந்தி நாடு முழுவதும் சென்று ஆதரவு திரட்டி வரும் நிலையில் நேற்று தமிழகம் வந்த அவர் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்தார். மேலும் திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி ஆகியோர்களையும் சந்தித்து தனக்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொண்டார்.
அடுத்த கட்டுரையில்