புயல் கரையை கடக்கும் வரை தஞ்சை, கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும்.
சென்னையை பொருத்தவரை 15, 16, 17 தேதிகளில் மிதமான மழை இருக்கும். சென்னைக்கு நேரடியாக புயலால் பாதிப்பு இருக்காது. இனிமேலும், புயல் திசை மாறக்கூடிய வாய்ப்பு குறைவு. கடந்த 24 மணி நேரமாக புயல் குறைந்த வேகத்தில்தான் நகர்ந்துக்கொண்டு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.