வண்டலூர் பூங்கா ஊழியர்கள் 70 பேர்களுக்கு கொரோனா: இழுத்து மூட உத்தரவு!

சனி, 15 ஜனவரி 2022 (18:47 IST)
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் 70 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் இழுத்து மூட உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதனை அடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை குறிப்பாக இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு உத்தரவு ஆகியவைகளை பிறப்பித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் 70 ஊழியர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஜனவரி 31 வரை வரை வரை வண்டலூர் பூங்காவில் இழுத்து மூட அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்