நரகத்தின் வாசலை மூடும் துர்க்மெனிஸ்தான்..! – சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!

திங்கள், 17 ஜனவரி 2022 (15:43 IST)
துர்க்மேனிஸ்தானில் உள்ள பிரபல சுற்றுலா பகுதியான நரகத்தின் வாசலை முற்றிலும் மூடப்போவதாக துர்க்மெனிஸ்தான் அறிவித்துள்ளது.

துர்க்மெனிஸ்தானின் டார்வேசா என்ற பகுதியில் இயற்கை எரிவாயு குறித்த ஆய்வின்போது நிலப்பரப்பில் வட்ட வடிவில் பெரிய பள்ளம் உருவானது. அதில் அதிக அளவில் மீத்தேன் இருப்பது கண்டறியப்பட்டது.

அந்த மீத்தேன் வாயு பரவாமல் இருக்க 1971ம் ஆண்டில் பள்ளத்தில் தீ வைக்கப்பட்டது. அன்றைக்கு தொடங்கி இன்று வரை அந்த பள்ளம் தொடர்ந்து எரிந்து வருகிறது. இதனால் நரகத்தின் வாசல் என்று அழைக்கப்படும் அந்த பள்ளத்தை காண உலகம் முழுவதிலும் இருந்து வெளிநாட்டு பயணிகள் பலர் வருகை புரிகின்றனர்.

இந்நிலையில் தொடர்ந்து பள்ளம் எரிந்து வருவதால் ஏற்படும் சுற்றுசூழல் மாசுபாட்டை குறைக்கவும், மீத்தேனை எரிபொருளாகவும் பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ள துர்க்மெனிஸ்தான் அரசு பள்ளத்தை மூடுவதாக அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்