சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், 490க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்தியா, தைவான், ஹாங்காங், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 20 நாடுகளில் இந்த வைரஸ் பரவி வருகிறது.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. மேலும் ஹாங்காங் நாட்டை சேர்ந்த ஒருவரும், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி சீனாவில் ஜிங்ஜியாங் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயிலும் 3 ஆம் ஆண்டு மாணவர் அபிஷேக் திருப்பூர் வந்தார். அப்போது, “கொரோனா வைரஸ் இறைச்சி மார்க்கெட்டில் இருந்து பரவி உள்ளது. சீன மக்கள் அன்றாட தங்களது உணவில் இறைச்சியை அதிகம் பயன்படுத்துகின்றனர். வாரக்கணக்கில் இறைச்சியை பிரீசரில் வைத்து விற்பதாலும் கொரோனா வைரஸ் உருவாகி இருக்கலாம்” என கூறினார்.