தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வுகள் நடத்துவதாக அரசு அறிவித்திருந்தது. இதற்கு மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினர் இடையேயும் அதிர்ப்பு எழுந்தது. பலரின் கோரிக்கைகளை பரிசீலித்த அரசு பொதுத்தேர்வை ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டது.
இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டும் இருந்தார். இதுகுறித்து பேசியுள்ள அவர் “பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை பரிசீலித்து இந்த முடிவை தமிழக அரசு எட்டியுள்ளது. மேலும் பொதுத்தேர்வுக்காக 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களிடன் ஆசிரியர்கள் வசூலித்த தேர்வு கட்டணத்தை திரும்ப அளிக்க வேண்டும். தேர்வு ரத்தானதால் அந்த தொகையை திரும்ப தருவதுதான் ஆசிரியர்களின் கடமை” என்று கூறியுள்ளார்.