5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு தமிழக அரசு பொதுத்தேர்வு அறிவித்திருந்த நிலையில் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்ததால் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் நன்றி தெரிவித்துள்ளனர்.
5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவித்தபோது அதை ஆதரித்து பதிவிட்டு வந்தவர் பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர். தற்போது அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் ” 5வது 8 வது பொதுத்தேர்வு ரத்து கல்வித்துறை உத்தரவு. அப்படியே 10 வது 12 வது தேர்வையும் ரத்து பண்ணிடுங்க. பசங்க விளங்கிடுவாங்க. வால்க தமில்.” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.