நான்கு விதமானவர்களுக்கு நான்கு கலர்களில் இலவச டிக்கெட்! – தமிழக அரசு

Webdunia
ஞாயிறு, 20 ஜூன் 2021 (12:08 IST)
தமிழகத்தில் அரசின் நகர மற்றும் மாநகர பேருந்துகளில் மகளிர், மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணிக்க தனி பயணசீட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ள்ன.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்த நிலையில் அறிவிக்கப்பட்ட முதல் 5 திட்டங்களில் பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயண திட்டமும் ஒன்று. பின்னர் பெண்களுக்கு வழங்குவது போல மாற்று திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவருக்கும் இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இலவசமாக பயணிக்கும் நான்கு விதமானோருக்கும் நான்கு கலர்களில் புதிய பயண சீட்டுகளை போக்குவரத்து கழகம் அச்சிட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு சிவப்பு நிறத்திலும், மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்களுக்கு நீல நிறத்திலும், மூன்றாம் பாலினத்தவருக்கு பிங்க் நிறத்திலும், பெண்களுக்கு ப்ரவுன் நிறத்தில் இலவச டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்