விஜய்யின் ‘’பீஸ்ட்’’ பட 3 வது லுக் ரிலீஸ்… ? ரசிகர்கள் உற்சாகம்

செவ்வாய், 22 ஜூன் 2021 (19:22 IST)
விஜய் நடிப்பில் உருவாகிவரும்’ பீஸ்ட்’ படத்தின் 3 வது லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் நெல்சன் இயக்கி வரும் திரைப்படம் தளபதி 65. இந்த நிலையில் இன்று  விஜயின் பிறந்தநாளை அடுத்து தளபதி 65 திரைப்படத்தில் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் நேற்று மாலை ரிலீஸ்  ஆனது.
.
 இதையடுத்து, ரசிகர்களுக்கு சர்ப்பிரைஸ் அளிக்கும் வகையில் நேற்று இரவு 12 மணிக்கு விஜய்யின் பீஸ்ட் படத்தின் உண்மையான சம்பவம் உள்ளது என சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, இது இன்னும் முடியல இனிமேல்தான் ஆரம்பமே எனக் கூறியது. இதனால் ரசிகர்கள் #sunpictures மற்றும்   #vijaysecondlookposter  என்ற பெயரில் ஹேஸ்டேக் வைரலானது.

இன்று விஜய்யின் பிறந்தநாளுக்கு தென்னிந்திய சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து  தெரிவித்து வரும்  நிலையில் தற்போது 3 வது விஜய்யின் ’பீஸ்ட்’ பட  3 வது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

மேலும் இது  ஒரு ரசிகர் உருவாகியுள்ள போஸ்டர் என்பதால் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்டர் நேர்த்தியாகவும் அழகாக உள்ளதாகவும் பலரும் கருத்து தெரிவித்து, இதை உருவாக்கியவரை   பாராட்டி வருகின்றனர்.

 

Roch killing it #BeastThirdLook pic.twitter.com/sumseGKM9j

— S Abishek Raaja (@cinemapayyan) June 22, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்