ரயில் மோதி 4 வாலிபர்கள் பலி : சென்னையில் அதிர்ச்சி

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2016 (17:20 IST)
ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 வாலிபர்கள், ரயில் மோதி பரிதாபமாக பலியான சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சமீப காலமாக ரயில் விபத்தில் உயிர்கள் பலியாவது சென்னையில் அதிகரித்து வருகிறது. நேற்று தாம்பரம் ரயில் நிலையத்தில், ரயிலில் இருந்து ஒரு பெண் கீழே இறங்க முயன்ற போது ரயில் புறப்படத் தயாராகிவிட்டது. இதனால் பதட்டம் அடைந்த அந்த பெண், கீழே குதிக்க முயன்றார். அப்போது அவரின் குழந்தை தண்டவாளத்தில் விழுந்து, ரயில் சக்கரம் ஏறி பலியானது. தண்டவாளத்தில் சிக்கிய அவரின் கால் உடைந்தது.
 
இந்நிலையில், இன்று சென்னை நுங்கம்பாக்கம்- சேப்பாக்கம் இடையே உள்ள ரயில்வே தண்டவாளத்தை வட மாநிலத்தை சேர்ந்த 4 வாலிபர்கள் கடக்க முயன்றனர். அப்போது வேகமாக வந்த ரயில் ஒன்று அவர்களின் மீது மோதியது. இதல் அவர்கள் நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 
இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்