நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு நாளை தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை...

வெள்ளி, 31 ஜனவரி 2020 (18:51 IST)
நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு நாளை காலை தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை டெல்லி பாட்டியாலயா நீதிமன்றம் விதித்துள்ளது. 
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளை வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்ய சிறை நிர்வாகம் போதிய ஆவணங்களைத் தர மறுப்பதாக குற்றவாளிகளில் இருவரான அக்சய்குமார் சிங், பவன்குமார் சிங் ஆகியோர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
 
அந்த மனுவில், குற்றவாளிகள் தூக்கு தண்டனையை எதிர்த்து முறையீடு செய்வதற்காக சட்ட வழிமுறைகள் இதுவரை முடியவில்லை. ஜனதிபாதிபதிக்கு வினய்குமாரின் கருணை மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக்சய் குமார் மற்றும் பவன் குப்தா இருவரும் கருணை மனு தாக்கல் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் சட்ட வழிமுறைகள் நிறைவடையும் முன் தூக்கில் இடக் கூடாது என  அந்த மனுவில் தெரிவித்திருந்தது.
 
இதனையடுத்து, நீதிபதி தர்மேந்தர் ரானா,  நிர்பயா குற்றவாளிகளுக்கு அடுத்த உத்தரவு வரும் வரை தூக்கு தண்டனை விதிப்பதற்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.
 
இந்நிலையில், நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில் டெல்லி பாட்டியாலா விசாரணை நீதிமன்றம் துக்குதண்டனைக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்