’கவுரவம்’ - தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை ஆஸ்திரேலிய நாட்டிற்கு அழைக்கின்றனர்!

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2016 (21:22 IST)
டெல்லியில், கடந்த மார்ச் மாதம், தமிழகத்தை சேர்ந்த வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நடத்திய உலக கலாச்சார விழாவில் ஆஸ்திரேலிய நாட்டின் விக்டோரியா மாநில முன்னாள் முதல்வர் எட்வர்ட் நார்மன் பெய்லி கலந்துக்கொண்டார். 


 
 
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், உலக சமாதானத்திற்கான தாக்கத்தை மக்களிடத்தில் ஏற்படுத்துவது அவருக்கு மிகவும் பிடித்ததுப் போனது.  அதனால், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை,  மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில், உலக கலாச்சார விழாவை 2018-ஆம் ஆண்டு நடத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவரை ஆஸ்திரேலேய பாராளுமன்றத்தில் உரையாற்றவும் கேட்டுக்கொண்டுள்ளார்.


 
 
குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மேற்கொண்ட கிராமப்புற வளர்ச்சிக்காகவும், மக்களின் மன அழுத்த விடுதலைக்காகவும், கல்வி சேவைக்காகவும், மனிதாபிமான செயலுக்காகவும், பிரிட்டன், கொலம்பியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்களிடம் இருந்து பாராட்டுக்களை பெற்றுள்ளார். 


 
 
வாழும் கலையின் 35-வது ஆண்டை முன்னிட்டு, டெல்லியில் கடந்த மார்ச் மாதம் உலக கலாச்சார விழா நடைபெற்றது,  இதில், 150 நாடுகளில் இருந்து, 37 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்துக்கொண்டனர். மேலும், இதில் 100 நாடுகளில் இருந்து 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்கள் பாரம்பரிய நடனம் மற்றும் இசையை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்