புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணையை ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (23:35 IST)
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள காசிபாளையம் பேய்யணை பகுதியில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பவானி ஆற்றின் குறுக்கே தண்ணீரை தேக்கி நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில் கடந்த ஆட்சியில் 15 கோடியே 10 லட்சம் மதிப்பில் புதிதாக தடுப்பணை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டது,
 
இதன் மூலம் அப்பகுதியில் உள்ள விவசாயநிலங்களிக் நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழிக்கவும் கரையோரம் உள்ள மரம் செடி கொடிகளுக்கு இந்த தடுப்பணை மூலம் தேக்கி வைக்கப்படும் நீர் போதுமானதாக இருக்கும்,
 
காசிபாளையம் பேய்யணை பகுதியில்  புதிதாக  கட்டப்பட்டு வரும் இந்த தடுப்பணையை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார், 
 
மேலும் தடுப்பணை கட்டும் பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில் பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்னார்,
 
அதனை தொடர்ந்து கொடிவேடி அணைரோடு மற்றும் உடையாக்கவுண்டன்பாளையம் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதியதார்சாலை அமைப்பதற்க்காக பூமி பூஜையில் கலந்து கொண்டு பணிகளை துவக்கிவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
 
இந்த நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் குறிஞ்சி நாதன் நகரக் கழகச் செயலாளர் பிரீ னியே  கணேஷ் அருள் ராமச்சந்திரன் பாண்டு காசிபாளையம் மணி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காளியப்பன் மற்றும்அதிமுக தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்