இந்த வழக்குகள் மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சிவி சண்முகம் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. விஏஓ அளித்த புகாரின் பேரில் பதிந்த வழக்கில் சரியான பிரிவுகள் சேர்க்கவில்லை என உயர் நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தப்பட்டதை நிரூபிக்கவில்லை என்றும், ஒரே சம்பவத்துக்கு பல வழக்குகள் பதிவு செய்ய முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது. மேலும் எஃப்ஐஆரில் குறைபாடுகள் உள்ளன என்று கூறி வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.