உருவானது புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை..!

Mahendran

சனி, 14 டிசம்பர் 2024 (11:45 IST)
டிசம்பர் 15ஆம் தேதிக்குள் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தமான் கடலில் மத்திய பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மன்னார்குடி வளைகுடா பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியை உருவானதாகவும் இதனை தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து டிசம்பர் 17ஆம் தேதிக்கு தமிழகத்தில் ஆரஞ்சு கலர் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் டிசம்பர் 17ஆம் தேதி 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை தமிழகத்தின் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் மிக கனமழை எச்சரிக்கையும் இந்திய மாநில ஆய்வு மையம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக மீண்டும் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்