விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மாதம்தோறும் பௌர்ணமி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று வழிபடுவது வழக்கமாக உள்ளது.
அதன்படி 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 60 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்கள் மலையேற்றத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். எளிதில் தீப்பற்றும் பொருட்களை எடுத்து செல்லக்கூடாது. காலை 6 மணி முதல் 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் இரவில் மலையில் தங்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.