வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு திடீர் தடை! – வனத்துறை அறிவிப்பு!
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (13:12 IST)
வெள்ளியங்கிரி மலையில் உள்ள சுயம்புலிங்க கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது
கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரக பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி மலை பகுதிக்கு பவுர்ணமி, திருவிழா காலங்களில் பக்தர்கள் அங்குள்ள சுயம்புலிங்க கோவிலுக்கு தரிசனம் செல்வது வழக்கமாக உள்ளது.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அப்பகுதியில் செல்ல மக்களுக்கு திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் தண்ணீர் தேடி வன விலங்குகள் வெள்ளியங்கிரி மலை பக்கம் வருகின்றன.
இன்று சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் பலர் வெள்ளியங்கிரி மலை செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக வெள்ளியங்கிரி மலை செல்ல வனத்துறை திடீர் தடை விதித்துள்ளது.