பொங்கல் கொண்டாட்டங்களுக்கு தடையில்லை: புதுவை ஆளுனர் அறிவிப்பு!

திங்கள், 10 ஜனவரி 2022 (18:59 IST)
பொங்கல் கொண்டாட்டத்திற்கு தடை இல்லை என புதுவை மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அறிவித்துள்ளார். 
 
கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் பொங்கல் கொண்டாட்டத்திற்கு தடை ஏற்படும் என்ற அச்சம் தமிழகம் மற்றும் புதுவை மக்கள் மனதில் எழுந்துள்ள நிலையில் புதுச்சேரியில் பொங்கல் விழா கொண்டாட்டத்திற்கு தடை இல்லை என அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்
 
மேலும் வார இறுதியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் எனவும் ஆளுநர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பொங்கல் கொண்டாட்டத்திற்கு தடை இல்லை என்ற அறிவிப்பு புதுவை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்