தேர்தல் நடைமுறை விதிமுறை அமலுக்கு வந்துள்ளதை அடுத்து பறக்கும் பறக்கும் படையினர் சோதனை செய்து வருகின்றனர் என்பதும் ஆளும் கட்சி அமைச்சர்கள் உட்பட பலரும் சோதனைக்கு உள்ளாகி வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நீலகிரி மாவட்டத்திற்கு பிரச்சாரத்திற்கு சென்ற போது அவருடைய காரை பறக்கும் படையினர் திடீரென வழிமறித்து தீவிர சோதனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து பறக்கும் படையினர் முழு வீச்சில் சோதனை செய்து வரும் நிலையில் இதுவரை பல லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் தங்கம் போன்ற போன்றவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிச்சாமி சூறாவளி பிரச்சாரம் செய்து வரும் நிலையில் நீலகிரிக்கு அவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றபோது திடீரென பறக்கும் படை அதிகாரிகள் அவருடைய காரில் சோதனை செய்தனர்
இந்த சோதனை நடைபெற்ற போது எடப்பாடி பழனிச்சாமி காரில் இருந்து வெளியே வரவில்லை என்றும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்யும் வரை அவர் அமைதியாக காரில் உட்கார்ந்து கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது
இதனை அடுத்து காரில் எந்தவிதமான பணம் மற்றும் ஆவணங்கள் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே எடப்பாடி பழனிச்சாமி காரை செல்ல பறக்கும் படை அதிகாரிகள் அனுமதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.