கன்னியாகுமரியில் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

ஞாயிறு, 10 டிசம்பர் 2017 (12:11 IST)
ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்துத் தரக்கோரி கன்னியாகுமரியில் மீனவர்கள் கடலில் போராட்டம் நடத்தி வருகிறனர்
குமரி மாவட்டத்தை கடந்த 30-ந்தேதி ஓகி புயல் புரட்டி போட்டது. கடலுக்கு மின்பிடிக்கச் சென்ற மீனவர்கள் ஒக்கி புயலில் சிக்கினர். இவர்களை மீட்க மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மீனவர்களை சிலர் இன்னும் வீடு திரும்பாத நிலையில் அவர்களை மீட்டுத் தரக்கோரி அவர்களது குடும்பத்தினர் மற்றும் பகுதிவாசிகள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் காணாமல் போன மீனவர்களை விரைந்து மீட்கக்கோரியும், உரிய நிவாரண தொகை வழங்ககோரியும், கன்னியாகுமரியில் ஏராளமான மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்