ஓகி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்டு தரக்கோரி போராட்டம்

வியாழன், 7 டிசம்பர் 2017 (15:41 IST)
ஓகி புயலில் சிக்கிய மீனவர்கள் இன்றுவரை வீடு திரும்பாததால், மீனவர்களை மீட்டு தரக்கோரி அவர்களது குடும்பத்தினர் குழித்துறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டத்தை கடந்த 30-ந்தேதி ஓகி புயல் புரட்டி போட்டது. மரங்கள், மின்கம்பங்கள் முறிந்தன. வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. குமரி மாவட்டம் இருளில் மூழ்கியதால் மக்கள் தவித்தனர். கடந்த ஒரு வாரமாக உணவு, குடிநீர், மின்சாரம் இல்லாமல் மக்கள் தத்தளிக்கிறார்கள். 
 
கடலுக்கு மின்பிடிக்க சென்ற மீனவர்கள் ஒக்கி புயலில் சிக்கினர். இவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மீனவர்களை சிலர் இன்னும் வீடு திரும்பாத நிலையில் அவர்களை மீட்டுத் தரக்கோரி அவர்களது குடும்பத்தினர் மற்றும் பகுதிவாசிகள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். 
 
8 கிராமங்களை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 7 நாட்கள் ஆகியும் கடலுக்குச் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை என்றும் அவர்களை மீட்டுத் தரக் கோரியும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசின் சார்பில் தங்களை வந்து யாரும் பார்க்கவில்லை என்று கூறி ரயில் மறிய போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் தலைவர்கள் பலரும், மீனவர்களை மிட்பத்தில் தமிழக அரசு கவனம் செலுத்தவில்லை என குற்றம்சாட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில் மீனவ குடும்பத்தினரின் போராட்டம் வலுத்துக் கொண்டே இருக்கிறது. போராட்டத்திற்கு மக்களின் ஆதரவும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்