ஜி.எஸ்.டியால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை – முதல்வர் ஸ்டாலின்

சனி, 3 செப்டம்பர் 2022 (13:40 IST)
மத்திய அரசு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தியதால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை உண்டாகிறது எனத் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைத்தது. அதன்பின்,  ஜிஎஸ்டி வரியை நாடு முழுவதும் அமல்படுத்தியது.

இந்த நிலையில், கேரளா மா  நிலம் கோவளம் பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில்  30 வது தென்மண்டலக் கவுன்சில் கூட்டம் இன்று நடந்தது.

இக்கூட்டடத்தில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியதில் இருந்து மா நிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாகவும்,  மா நிலங்களுக்கு வழங்கப்படும் இழபீடு தொகைக்கான காலம்   நீட்டிப்பதுடன், நிலுவைத் தொகையை   உடனடியாக வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்