பிரதமர் போட்டோதானே.. போட்டுட்டா போச்சு! – டிஆர்எஸ் கட்சியினர் செய்த வேலை!

சனி, 3 செப்டம்பர் 2022 (13:30 IST)
பிரதமர் போட்டோ வைக்காதது குறித்து நிர்மலா சீதாராமன் பேசிய நிலையில் டிஆர்எஸ் கட்சியினர் கேஸ் சிலிண்டரில் பிரதமரின் படத்தை ஒட்டியது வைரலாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் ரேஷன் கடையில் பிரதமரின் புகைப்படத்தை வைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இது குறித்து நேற்று தெலுங்கானா வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பேசியபோது தெலுங்கானாவில் உள்ள கடைகளில் பாஜக தொண்டர்களால் வைக்கப்படும் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் கிழிக்கப்படுகின்றன. 

ரேஷன் கடையில் பிரதமரின் புகைப்படம் வைக்காவிட்டால் நானே வருவேன் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை குறிப்பிட்டு கேஸ் சிலிண்டர்களில் பிரதமர் மோடி புகைப்படத்துடன், சிலிண்டர் விலையையும் குறிப்பிட்ட போஸ்டரை ஒட்டி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்