பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்? – நிதியமைச்சர் விளக்கம்!

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (11:01 IST)
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில் விலை குறைப்பு எப்போது என தமிழக நிதியமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வேகமாகஅதிகரித்து ரூ.100 ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் பெட்ரோல் விலை ரூ.100 ஐ எட்டியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பெட்ரோலிய பொருட்கள் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பது குறித்து சட்டமன்றத்தில் எழுந்த கேள்விக்கு விளக்கமளித்துள்ள தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ” மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் 1%-ஐ கொரோனா 2ம் அலைக்காக செலவிட்டு வருகிறோம். நிதி நிலை சீரானதும் முதலமைச்சரின் வாக்குறுதி அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்