இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு அட்டவணை எப்போது? அமைச்சர் அன்பழகன் தகவல்

ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (17:58 IST)
தமிழகத்தில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் அனைவரும் பாஸ் செய்யப்படுவதாகவும் சமீபத்தில் முதல்வர் அறிவித்திருந்தார். இதனை அடுத்து முதல்வருக்கு கட்-அவுட் வைத்தும் போஸ்டர் ஒட்டியும் மாணவர்கள் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் தெரிவித்துள்ளார். யுஜிசியின் அறிவுரைப்படி இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தேர்வுகளை விரைவில் நடத்த அரசு தகுந்த ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்துள்ளார் 
 
மேலும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் ஆன்லைனில் தேர்வுகள் நடத்துவது குறித்து உயர் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் துணை வேந்தர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருவதாகவும் இது குறித்து விரைவில் அரசின் முறையான அறிவிப்பை வெளியிடும் என்றும் அவர் கூறினார் 
 
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் ’இது குறித்து ஒரு குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்வதாகவும் அதன் பின்னரே ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார் 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்