முதல்வர் தான் எங்கள் கடவுள்: 24 அரியர் வைத்த எஞ்சினியரிங் மாணவரின் வீடியோ

வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (20:25 IST)
24 arrear
24 அரியர் வைத்திருந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ஒருவர் தனது அனைத்து அரியர்களையும் முதல்வரின் ஒரே ஒரு அறிவிப்பால் க்ளியர் ஆகிவிட்டதை அறிந்து மகிழ்ச்சி அடைந்து முதல்வர்தான் எங்கள் கடவுள் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இறுதி ஆண்டு செமஸ்டர் தவிர மற்ற அனைத்து மாணவர்களும் பாஸ் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சமீபத்தில் அறிவித்துள்ளார். இந்த நிலையில் 24 அரியர் வைத்திருந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் ஒருவர் வீடியோ ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்
 
அந்த வீடியோவில் தான் பல முறை முயன்றும் அரியர்களை முடிக்க முடியவில்லை என்றும் ஆனால் முதல்வரின் ஒரே ஒரு அறிவிப்பு எனது அனைத்து அரியர்களையும் கிளியர் செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார் மேலும் முதல்வர் அவர்களுக்கு நன்றி கூறிகொள்வதாகவும், ஆனால் அதே நேரத்தில் அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இனிமேல் அடுத்து வரும் செமஸ்டர்களில் கடுமையாக படித்து பாஸ் ஆகி விடுவேன் என்றும் அவர் தெரிவித்தார் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்