எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் ஆகிய அணிகள் ஒன்றிணைந்து, பொதுக்குழுவை நடத்தி, அதன் தீர்மானங்களை தேர்தல் கமிஷனில் சமர்பித்து, பெருவாரியான நிர்வாகிகள் தங்கள் பக்கமே இருப்பதால் இரட்டை இலை சின்னத்தை வழங்க வேண்டும் என மனு கொடுத்தனர். ஆனால், இந்த விவகாரத்தில் தங்களை கேட்காமல் முடிவெடுக்கக் கூடாது என தினகரன் தரப்பிலும் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டது.
அப்போது, கூடுதம் ஆவணங்களை தாக்கல் செய்ய தினகரன் தரப்பிற்கு ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை கடந்த 13ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், அந்த விசாரணை 16ம் தேதியே நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெறுகிறது. எனவே, இரட்டை இலைக்கு யாருக்கு சொந்தம் என்பது இன்றைய விவாதத்தில் தெரிய வரும். ஆனால், அதை தேர்தல் ஆணையம் இன்றே அறிவிக்குமா இல்லை சில நாட்கள் கழித்து அறிவிக்குமா என்பது தெரியவில்லை.