நடிகை சினேகா மற்றும் நடிகர் பிரசன்னா - "அட்வான்ஸ்டு குரோ ஹேர்" மற்றும் "குளோ ஸ்கின் கிளினிக்" 50-வது கிளையை தொடங்கி வைத்தனர்!

J.Durai

சனி, 30 மார்ச் 2024 (13:52 IST)
இந்தியாவின் முன்னணி ஹேர் & ஸ்கின் கிளினிக் நிறுவனமான குரோ ஹேர் & குளோ ஸ்கின் கிளினிக் கின் கிளை கோவை ஆர்.எஸ் புரத்தில் 2022 ஆம் தொடங்கப்பட்டது.
 
கோவை மக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பேராதரவோடும் வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது
 
தற்போது கோவையின் முக்கிய இடமான அண்ணா சிலை அருகே அவினாசி சாலையில் பிரமாண்டமாக 50 வது புதிய கிளையை தொடங்கியுள்ளது.
 
அட்வான்ஸ்டு குரோ ஹேர் & குளோ ஸ்கின் கிளினிக், முடி மீளுருவாக்கம் மற்றும் தோல் சிகிச்சையில் புகழ்பெற்ற முன்னணி நிறுவனம் ஆகும். 
 
முழு அர்ப்பணிப்புடன் சேவை, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் முடி வளர்ச்சிக்கான அணுகக்கூடிய தீர்வுகளை வழங்குவதற்கு மேம்பட்ட GroHair & GloSkin கிளினிக், மருத்துவ மற்றும் மருத்துவம் அல்லாத அணுகுமுறைகளை கொண்ட  விரிவான சிகிச்சைகளை வழங்குகிறது. 
 
முடி மீண்டும் வளரும் வகையில், குளுதாதயோன், ஹைட்ராஃபேஷியல், க்யூ ஸ்விட்ச்டு லேசர், கெமிக்கல் பீல், போடோக்ஸ், ஃபில்லர்ஸ், த்ரெட் லிஃப்ட், ஃபுல் பாடி லேசர், ஃபேஸ் பிஆர்பி, மருக்கள் அகற்றுதல் மற்றும் பல  தோல் சிகிச்சைகளை  குளோ கிளினிக் வழங்குகிறது. 
 
கிளினிக் அதிநவீன உபகரணங்களைக் கொண்டுள்ளது மேலும்  அழகியல் மருத்துவத் துறையில் உலகத் தரம் வாய்ந்த நிபுணர்களால் நிர்வகிக்கப்பட்டு காப்புரிமை பெற்ற உயர்நிலை இயந்திரங்களைப் பயன்படுத்துகிறது. ஆகையால் இவை இந்த உலகத்தரம் வாய்ந்த அதிநவீன உபகரணங்கள் நம் கற்பனைக்கும் எட்டாத தீர்வுகளை வழங்குகிறது.
 
இந்நிகழ்ச்சியில் சிறப்பு  விருந்தினர்களான பி.பைந்தமிழ்  பாரி, குரோ ஹேர் & குளோ ஸ்கின் கிளினிக் கின்நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் சரண் வேல் ஜே ,  எஸ் எஸ் வி எம் குழுமத்தின் நிறுவுனர் டாக்டர்.மணிமேகலை பிரபல திரைப்பட நடிகை சினேகா மற்றும் நடிகர் பிரசன்னா கலந்துகொண்டனர்.
 
உடன் கிளை உரிமையாளர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உடனிருந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்